விஜய்யின் குரலில், யுவனின் இசையில்...''தி கோட்'' பட புதிய தகவல்

13.03.2024 07:00:00

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது,  தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்கிறது.
 

 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில், அரசியலில் கவனம் செலுத்திக் கொண்டேட் இப்படத்திலும் அவர் நடித்து வருகிறார்.
 

லியோ படத்தில்  நான் ரெடிதான் வரவா என்ற பாடலை அனிருத் இசையில் பாடியிருந்தார். இப்பாடலை ஸ்டுடியோவில் விஜய் ஒரு மணி  நேரத்திலேயே பாடியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்,  கோட் படத்தைப் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது, லியோவை தொடர்ந்து  இப்படத்திலும் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளாராம்.  யுவனின் இசையில், இப்பாடலை விஜய் 4 மணி நேரத்தில் அருமையாக பாடியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஏற்கனவே விஜய் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ள  நிலையில், தி கோட் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு யுவன் சங்கர ராஜாவுடன் விஜய் இணைந்துள்ளதால் இப்பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என்ற தகவல் வெளியாகிறது.

மேலும், விரைவில் கோட் பட முதல் சிங்கில் பற்றிய அப்டேட் வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.

 

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.