சபரிமலைக்கு 50 தடவைகள் யாத்திரை: இணையத்தைக் கலக்கும் சிறுமி!

05.01.2024 16:37:11

10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு தனது தந்தையுடன் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

குறித்த சிறுமி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளார் எனவும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது