இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலையில் சிக்கி அழிந்து போன வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03.03.2021 09:13:31
இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலையில் சிக்கி அழிந்து போன வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புராதான நகரமான சிவிட்டா குலியானா என்ற இடத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் 4 சக்கரங்கள் கொண்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பெரும்பாலும் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாகனம் யாரால் எப்பொழுது பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கி.பி.79ஆம் ஆண்டில் பொம்பெய் எரிமலை வெடித்தபோது சிவிட்டா நகரமும் முற்றிலும் அழிந்துபோயிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.