ரஜினிகாந்துக்காக பெயரை மாற்றிக்கொண்ட முன்னணி நாளிதழ்!
20.11.2025 14:25:06
|
இந்திய சினிமாவில் மாபெரும் சாதனை படைத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளை சினிமாவில் கடந்து தனக்கென்று தனி வரலாறை உருவாக்கியுள்ளார். இந்த மாபெரும் சாதனைக்காக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் கவுரவிக்கப்பட உள்ளார். இன்று தொடங்கி 28ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறும் நிலையில், விழாவின் நிறைவு நாளில் இந்த கவுரவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது. |
|
இந்த நிலையில், OTTplay-வுடன் இணைந்து பிரபல பிரபல ஆங்கில நாளிதழ் தங்களது பெயரை ரஜினிகாந்திற்காக மாற்றிக்கொண்டு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு தனி நபருக்காகவும் இப்படியொரு விஷயத்தை செய்யாத அந்த நாளிதழ், முதல் முறையாக ரஜினிகாந்திற்காக இப்படி செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்டுத்தியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். |