ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

07.06.2022 04:54:41

ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கான வர்த்தக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில், ரஷ்யாவிற்கு தபால் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி தடை உத்தரவை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.