
பலநாடுகளுக்கான கட்டணம் இடைநிறுத்தம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) பல நாடுகளுக்கான தனது பரஸ்பர கட்டணத்தை 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
இந்த 90 நாள் காலகட்டத்தில், கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணம் மட்டுமே அமுலில் இருக்கும் என்று அவர் கூறினார்.
எனினும், சீனா மீதான வரிகளை உடனடியாக 125 சதவீதமாக அதிகரிப்பதாக அவர் அறிவித்தார்.
இது முன்னர் அறிவிக்கப்பட்ட 104 சதவீதத்திலிருந்து அதிகமாகும்.
இந்த அறிவிப்பானது உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பரக் கட்டணங்கள் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்துக்குப் பின்னர், ஒரு பெரிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களைத் தூண்டியதுடன், மந்தநிலை குறித்த கவலைகளையையும் எழுப்பியது.
இந்த எழுச்சி சர்வதேச பங்குச் சந்தைகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை அழித்தது மற்றும் ட்ரம்பின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றிய அமெரிக்க அரசாங்க திறைசேரி வருவாயில் கொந்தளிப்புக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது.