கூட்டமைப்பில் இருந்து விலகியதா டெலோ? நிலைப்பாடு வெளியானது

13.06.2021 10:59:06

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வெளியில் வந்து செயல்படுவதற்கான நிலை தற்போது வரை இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,டெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் உருவாக்கம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. கூட்டமைப்பிற்குள் சில பிரச்சினைகள் உள்ளது அதனை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வெளியில் வந்து செயல் படுவதற்கான எண்ணம் தற்போது வரை இல்லை.

சில பிரச்சினைகள் கட்சிக்குள் உள்ளது. அதனை நிவர்த்தி செய்து கொண்டு கூட்டுக்குள் இருந்து கொண்டு செயல் படுவோம் என்றார்.