
“தக் லைப்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்,
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைப்’. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் அலி பசல் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் திகதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. கடந்த செப்டம்பரில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது . படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் ‘தக் லைப்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதில் இன்னும் திரைப்படம் வெளியாக 65 நாட்கள் மட்டுமே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். வீடியோவில் கமல்ஹாசனின் சிறுவயது புகைப்படத்தில் இருந்து தற்போது வரை உள்ள புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இப்பாடலுக்கு கமல்ஹாசன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.