சூரி படத்தில் இணைந்த பிரபல கதாநாயகி!

07.12.2024 08:15:00

விமல் நடிப்பில் விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.
 

இதையடுத்து விடுதலை 1, கருடன் மற்றும் கொட்டுக்காளி என அடுத்தடுத்து நல்ல படங்களைக் கொடுத்து வரும் சூரி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் திருச்சி பின்னணியில் உருவாகும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான திரைப்படமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

இந்த படத்துக்கான கதையை சூரி தன் சொந்த வாழ்க்கையில் பார்த்த ஒரு சம்பவத்தில் இருந்து எடுத்துக் கூறியதாகவும், அதை வைத்து இயக்குனர் பாண்டிராஜ் திரைக்கதையை அமைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா லஷ்மி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.