டைட்டானிக் ஹீரோயின் படுத்திருந்த கதவு பல கோடிக்கு ஏலம்

27.03.2024 07:38:58

உலக புகழ்பெற்ற ஹாலிவுட் படமான டைட்டானிக் திரைப்படத்தில் ஹீரோயினை காப்பாற்ற பயன்படுத்தப்பட்ட கதவு பல கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளதாம்.
 

 



உலகம் முழுவதும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களிடையேயும், காதலர்களிடையேயும் மறக்க முடியாத எவர்க்ரீன் க்ளாசிக் திரைப்பரமாக இருப்பது டைட்டானிக். ஹாலிவுட் மாஸ்டர்களில் ஒருவரான ஜேம்ஸ் கேமரூன் இயக்கி 1997ல் வெளியான இந்த படம் இந்தியா உட்பட பல நாடுகளில் அப்போதே செம ஹிட் அடித்த படம். அதில் வரும் ஜாக் – ரோஸ் காதலை யாரும் மறக்க முடியுமா?
 

அந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் கடலில் கப்பல் மூழ்கி எல்லாரும் தத்தளிக்கும்போது ஜாக் (டி காப்ரியோ) ஒரு உடைந்த கதவில் ரோஸை (கேட் வின்ஸ்லெட்) படுக்க வைத்துவிட்டு தான் குளிர் தண்ணீரில் உறைந்து இறந்து போவார். ரோஸ் அதிலேயே படுத்திருந்து உதவிக்கு படகு வந்ததும் காப்பாற்றப்படுவார்.
இந்த காட்சியில் ரோஸ் படுத்திருந்த கதவு சமீபத்தில் ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது. நான் நீ என பலரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலம் கேட்ட நிலையில் ஒருவர் அந்த கதவை இந்திய மதிப்பில் சுமார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளார். அவர் டைட்டானிக் ரசிகரோ, கேட் வின்ஸ்லெட் ரசிகரோ தெரியவில்லை. ஆனால் ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்ட செட் ப்ராபர்டி இவ்வளவு தொகைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Edit by Prasanth.K