காமராஜர் நினைவு நாள்
03.10.2021 10:29:56
காரைக்காலில் காமராஜர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அர்ஜுன் சர்மா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வட்டார வளர்ச்சி அதிகாரி தயாளன், எஸ்.பி., ரகுநாயகம், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனர் குலசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.காங்., சார்பில் நெடுங்காடு பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து தலைமையில் காமராஜர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.