போப் தேர்வு மாநாடு.

08.05.2025 08:55:04

வத்திக்கான நேரப்படி புதன்கிழமை (07) இரவு 9.00 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு புகை வெளியேறியது.

போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இது உறுதிப்படுத்தியது.

மூடிய கதவுகளுக்குப் பின்னால் கூடும் 133 கார்டினல்கள், போப்பை தேர்வு செய்வதற்காக வரும் நாட்களில் மீண்டும் விவாதங்களைத் தொடங்கவுள்ளனர்.

சிஸ்டைன் தேவாலயத்திற்குள் ஒரு புனிதமான ஊர்வலத்தைத் தொடர்ந்து, வத்திக்கான் நேரப்படி மாலை 5:45 மணியளவில் முதல் சுற்று வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு கார்டினலும் ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

(தங்களுக்குத் தெரியவரும் தகவல்களை யாருக்கும் தெரியப்படுத்துவதில்லை என்று பதவியேற்கும்போது செய்துகொள்ளும் பிரமாணம்)

 

வாக்களிப்புகள் பதிவானதும், கவனம் தேவாலயத்தின் சின்னமான புகைபோக்கியின் மீது திரும்பியது.

இதன்போது, சிறிது நேரம் ஒரு கடற்பறவை அங்கு அமர்ந்திருந்தது விசேட கவனமாக அமைந்தது.

பல மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், இரவு 9:05 மணிக்கு, புகைபோக்கியில் இருந்து கரும்புகை எழுந்தது.

இது செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த 45,000 க்கும் மேற்பட்ட கூட்டத்தினரிடமிருந்து கைதட்டலைத் தூண்டியது.

போப்பாண்டவர் மாநாட்டில் முதல் சுற்று வாக்களிப்பில் கத்தோலிக்க கார்டினல்கள் புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டனர் என்பதை இந்த வெளிப்பாடு உறுதிப்படுத்தியது.

இந்த மாநாடு வியாழக்கிழமை (இன்று) மீண்டும் தொடங்கும்.

கடந்த மாதம் 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடரும்.

ஒரு போப் தேர்ந்தெடுக்கப்படும்போது சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளைப் புகை வெளிப்படும், ஆனால் புதன்கிழமை இது எதிர்பார்க்கப்படவில்லை.

நவீன காலத்தில் ஒரு மாநாட்டின் முதல் நாளில் ஒரு போப்பாண்டவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

நவீன போப் மாநாடுகள் பொதுவாக குறுகியவை. 2013 மாநாடு இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்தது.

அதேபோல் 2005 இல் அவரது முன்னோடியான பெனடிக்ட் XVI தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அவ்வாறே நீடித்தது.

அண்மைய நாட்களில், 1.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட திருச்சபையை வழிநடத்தும் அடுத்த போப்பாண்டவரிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பது குறித்து கார்டினல்கள் வெவ்வேறு மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர்.

சிலர் பிரான்சிஸின் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் சீர்திருத்தம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தொடர்ச்சியைக் கோரியுள்ளனர், மற்றவர்கள் பழைய மரபுகளைத் தழுவ விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

பலர் இன்னும் கணிக்கக்கூடிய, அளவிடப்பட்ட போப் பதவியை விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.