GOAT படத்தின் அப்டேட்...!! வெங்கட் பிரபு ட்வீட்..!
இயக்குனர் வெங்கட் பிரபு தனது X தலத்தில் ‘நாளை சம்பவம் உறுதி என்ற பதிவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக தற்பொழுது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் நடைப்பெற்று வருகிறது
சமீபத்தில் படப்பிடிப்பு நடக்கும்பொழுது நடிகர் விஜய் ஸ்கேடிங் சைக்கிள் ஓட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..
கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது என ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் விஜய் சால்ட் அன் பெப்பர் ஹேர்ஸ்டைலில் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார்
இதற்கு முன்னதாக இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என்று பதிவிட்டுள்ளார். நாளை (14-4-23) தமிழ் புத்தாண்டை முன்னிட்டு GOAT படத்தின் First Singles வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இதை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்