மரண வதந்திகளுக்கு நெதன்யாகுமுற்றுப்புள்ளி.

16.03.2026 14:05:46

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு சிற்றுண்டிச்சாலையில் கோப்பி அருந்தியபடி பேசிய அவர், 

“நான் செத்துக்கொண்டிருக்கிறேன் கோப்பிக்காக” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். (இது எதன்பேரில் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதற்காக உயிரையே விடுவேன் என்ற ஹீப்ரு மொழி வழக்கைக் குறிப்பதாகும்).

மேலும், தனது விரல்களைக் கெமரா முன் காட்டிய அவர், முந்தைய ஊடக சந்திப்பில் தனக்கு ஆறு விரல்கள் இருந்ததாகக் கூறி அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளி எனப் பரப்பப்பட்ட தகவல்களையும் மறுத்தார்.

இஸ்ரேலியப் பிரஜைகளுக்கு ஆற்றிய உரையில், ஈரான் மீது இஸ்ரேல் இன்றும் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, “குழந்தைகளைக் கொல்லும் இந்தக் குற்றவாளி உயிரோடு இருந்தால், எங்களின் முழுப் பலத்தையும் கொண்டு அவரைப் பின்தொடர்ந்து கொல்வோம்” என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.