இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி !

18.02.2021 10:42:37

பிரித்தானிய இளவரசி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான இளவரசர் ஃபிலிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல் அசௌகரியமாக உணர்ந்ததை அடுத்து, லண்டனில் உள்ள கிங் எட்வர்ட் மருத்துவமனையில் நேற்று (புதன்கிழமை) அனுமதிக்கப்பட்டதாக பக்கிங்காம் அரண்மனை தகவல் தெரிவிக்கின்றது.

இதுதொடர்பாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி அவர் மருத்துவமனைக்கு காரில் சென்றார். எடின்பரோ கோமகன் ஃபிலிப் நல்ல உணர்வுடனேயே உள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கு அவர் மருத்துவமனையிலேயே தங்கி பரிசோதனைகளை மேற்கொண்டு முழு ஓய்வில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

99 வயதான இளவரசர் பிலிப்புக்கு கொரோனா வைரஸ் தொடர்பான நோய் இல்லை என்றும் செவ்வாய்க்கிழமை மாலை உதவி இல்லாமல் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் ஒரு அரச வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.