இந்தியாவில் ஒரே நாளில் 30,615 பேருக்கு கொரோனா

16.02.2022 06:37:43

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

புதிதாக 30,615 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,27,23,558 ஆக உயர்ந்தது. புதிதாக 514 பேர் இறந்துள்ளனர்.

இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,09,872 ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 82,988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,18,43,446 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.94% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.87% ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,240 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்தியாவில் 1,73,86,81,675 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 41,54,476 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.