அறிக்கையின் உள்ளடக்கத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும்!
06.02.2021 11:07:00
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறு கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், வெளியிட்டுள்ள அறிக்கையின் பொருள் மற்றும் மிக முக்கியமான பரிந்துரைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று நம்புகிறது” என கூறியுள்ளார்.