பிரான்ஸில் கொவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள்..
11.05.2021 12:09:29
பிரான்ஸில் இன்னமும் ஒன்பது நாட்களில் உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளின் வெளிப்புற சேவைகள் திறக்க இருக்கும் நிலையில், சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி திறக்க இருக்கும், உணவகங்கள் மற்றும் மதுச்சாலை அருந்தகங்களின் வெளிப்புறங்களில் அவர்களின் கொள்ளவில் 50 சதவீமானவர்களிற்கு மட்டுமே பரிமாற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்த மேசையிலும் ஆறு பேரிற்கு மேல் அமர முடியாது என்பதையும் மீண்டும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அந்தச் சமயத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 9 மணி ஊரடங்குச் சட்டத்திற்கு அமைய அனைத்தும் 9 மணிக்கு மூடப்படல் வேண்டும்.