நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இடமாற்றம்

30.05.2022 07:55:47


கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய திட்டமிட்டனர் . இதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதியும் வாங்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்ப உறுப்பினர்கள் 150 பேர் வரை திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டதால் அதற்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தற்போது திருப்பதியில் நடக்க இருந்த தங்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடத்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முடிவெடுத்துள்ளனர். இந்த இடமாற்றம் குறித்த அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது.

அதோடு இந்த திருமண நிகழ்ச்சியில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பதாக கூறப்படுகிறது. மேலும் நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் நடைபெற்றாலும் சென்னையில் பிரம்மாண்டமான முறையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.