நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு தீவிரம்!

05.09.2021 06:00:00

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்றைய தினம் நல்லூர் ஆலய உள் வீதியில் இடம்பெறுகின்ற நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர்  நிலையில்  அடியவர்கள் ஒன்று கூடினால் தொற்று  பரவல் ஏற்பட  கூடிய நிலை காணப்படுவதன் காரணமாக நல்லூர் ஆலய தேர் உற்சவத்தினை தரிசிக்க  அடியவர்கள் ஆலயத்திற்கு வருவதை தடுக்கும் முகமாக  நல்லூர் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவற்துறையினர் ஆலய வளாகத்தில் அடியவர்கள் வராதவாறு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

ஆலய உற்சவத்தின் போது அமைக்கப்படும் வீதித் தடைகளை தாண்டி யாரும் உட்  செல்ல அனுமதிக்கப்படவில்லை அத்தோடு ஆலயத்திற்கு முன்பாக காவற்துறையினரின் பேருந்து வண்டி ஒன்று வீதிக்கு குறுக்காக நிறுத்தப்பட்டுள்ள தோடு  நல்லூர் ஆலய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.