
அரபு அமீரகம் வழங்கிய கோல்டன் விசா!
24.02.2022 16:52:45
தமிழ் சினிமா நடிகர்களில் பார்த்திபன், சிம்பு, திரிஷா, ராய் லட்சுமி போன்றவர்களுக்கு ஐக்கிய அமீரகம் விசா வழங்கி இருக்கிறது. அதேபோல் மலையாள சினிமாவைச் சார்ந்த மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், அமலாபால் போன்ற நடிகர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகையான பிரணிதாவுக்கும் ஐக்கிய அமீரகம் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த பிரணிதா தமிழில் உதயன், சகுனி, மாசு என்ற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.