கர்ணன் படக்குழுவினரை பாராட்டிய பிரபல நடிகர்

19.04.2021 10:50:28

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் கர்ணன் படக்குழுவினரை பிரபல நடிகர் பாராட்டி இருக்கிறார்.

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘கர்ணன்’. ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார். தனது கிராம மக்களின் உரிமைகளை போராடி பெற்றுத்தரும் கர்ணனாக தனுஷ் நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படம் வணிக ரீதியாக வசூலை வாரி குவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்படத்தில் நடித்துள்ள ரெஜிஷா விஜயன், யோகிபாபு, லால், கௌரி கிஷன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பிரபலங்களும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, விக்ரம் உள்ளிட்டோர் இந்த பார்த்து இயக்குனர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டியுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் ‌பிரஷாந்த், சமீபத்தில் கர்ணன் படத்தை பார்த்துள்ளார். அதன்பிறகு இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் சந்தித்த பிரசாந்த், அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்தார்.