சமியா சுலுஹி ஹஸன் தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவியேற்பு !
20.03.2021 09:54:42
தன்சானியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக சமியா சுலுஹி ஹஸன் பதவியேற்றுள்ளார்.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் அவர் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதிகளான அலி ஹஸன் வினை, ஜகாயா கிக்வேடே, அபைத் கருமே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுவரை துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அவர், உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ஜோன் மெகுஃபுலிக்கு பதிலாக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
61 வயதான சமியா சுலுஹி ஹஸன், இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.