யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 5 பேர் மரணம்
20.08.2021 10:57:55
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய் சுதுமலை வடக்கைச் சேர்ந்த 92 வயதுடைய ஆண் ஒருவரும், கைதடியைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும், மானிப்பாயைச் சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும், உரும்பிராயைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், அளவெட்டியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவருமே நேற்று உயிரிழந்துள்ளனர்.