‘பாதுகாப்பு படையை நவீனப்படுத்த 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் கொள்முதல்

03.11.2021 09:34:56

பாதுகாப்பு படைக்கு 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு படைக்கு தேவையான ஆயுத கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு படையை நவீனப்படுத்த 7 ஆயிரத்து 965 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 12 இலகு ரக ஹெலிகொப்டர்கள், உள்ளிட்டவை வாங்கப்படும். போர் கப்பல்களின் கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டுத் திறன் மேம்பாட்டிற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.