யேமனில் அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்குதல்!

09.02.2024 12:49:00

யேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது.

அதன்படி பாதுகாப்பு நடவடிக்கையாக ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக வைக்கப்பட்டிருந்த 7 ஏவுகணைகளை தாக்கிய அழித்ததாகவும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

மேலும் செங்கடலில் பயணிக்கும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதுடன் சர்வதேச வர்த்தக கப்பல் போக்குவரத்து பாதிப்படைந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.