பட்டா நிலத்தில் சந்தன மரம்
07.12.2021 07:52:27
பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும் பனை மரங்களை வெட்டவும் தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த டோமினிக் ரவி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணா, வேல்முருகன் விசாரித்தனர்.