ஓமான் அருகே விபத்து.

14.06.2026 14:30:26

ஓமான் கடற்கரை அருகே நடுக்கடலில், இந்தியக் கொடியுடன் பயணித்த 'விராட்-1' என்ற கப்பல் ஓமானின் ராஸ் அல்ஹத் நகருக்கு கிழக்கே சுமார் 80 கடல் மைல் தொலைவில் கடலில் மூழ்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளையும் அமெரிக்க கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.

மேலும், அவசர எச்சரிக்கை கிடைத்தவுடன், அமெரிக்காவின் பி-8 கடல் ரோந்து விமானம் மற்றும் மீட்புப் படகுகள் உடனடியாகச் செயல்பட்டு இந்த மீட்புப் பணியை மேற்கொண்டன.

அத்துடன், மாலுமிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில், கப்பல் மூழ்கியதற்கான காரணம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

 

இந்நிலையில், ஓமானுக்கான இந்தியத் தூதரகம் இந்த விபத்தை உறுதிப்படுத்தி, ஓமான் அதிகாரிகளுடன் இணைந்து தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.