புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

26.02.2022 16:26:43

கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமார் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நடிகர். 46 வயதேயான இவர், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது உடலுக்கு தற்போது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தமிழ் பிரபலங்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று(பிப்., 26) நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.