படம் இயக்குகிறார் ரசூல் பூக்குட்டி

14.04.2022 09:34:56


ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் பெரும்பாலும் பணியாற்றுவது தமிழ் மற்றும் இந்திப் படங்களில் தான். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 'ஒரு கதை சொல்லட்டுமா' என்கிற படத்தில் நடிகராகவும் மாறி, கதையின் நாயகனாக, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி என்கிற தனது நிஜ கதாபாத்திரத்திலேயே நடித்திருந்தார்.

இந்தநிலையில் தற்போது இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார் ரசூல் பூக்குட்டி. மலையாளத்தில் இவர் இயக்கவுள்ள படத்திற்கு ஒத்த என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை சில்ரன்ஸ் ரீயுனைடெட் எல்எல்பி என்கிற நிறுவனத்துடன் இணைந்து ரசூல் பூக்குட்டியே தயாரிக்கவும் செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பை படத்தின் டைட்டில் போஸ்டருடன் ரசூல் பூக்குட்டியே அறிவித்துள்ளார்.