நரிக்குறவர் வீட்டில் தேநீர் அருந்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02.07.2022 17:21:30
நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல். நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மை குட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்த மாநாட்டிற்கு முதலமைச்சரும், தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி உரை ஆற்றுகிறார். இதை பங்கேற்பதற்காக நாமக்கல் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிலுவாம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியினர் குடியிருப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.