
டிரம்பின் முயற்சியை தடுக்கும் ஐரோப்பா.
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான டிரம்பின் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் முடக்குவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாமல் ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக ரஷ்யாவின் செய்து தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அந்நாட்டு அரசு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். |
மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை அரசியல் மற்றும் ராஜதந்திர வழிகளில் தடுக்க தயாராக இருக்கிறோம், ஆனால் உக்ரைன் எந்தவொரு பரஸ்பர ஒத்துழைப்பிற்கும் தயாராக இல்லை. எனவே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். 2022 ம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய நிலையில், உக்ரைனின் 5ல் 1 பங்கு பகுதியை ரஷ்யா தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக அலாஸ்காவில் டிரம்ப் - புடின் சந்தித்து கொண்டனர், ஆனால் இந்த சந்திப்பில் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளின் பல தலைவர்கள் டிரம்பின் இந்த அமைதி முயற்சிகளை ஆதரித்தாலும், சிலர் டிரம்பின் முயற்சிகளை தடுப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த உதவியாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் நியாமற்ற கோரிக்கைகளை முன்வைப்பதோடு மட்டுமில்லாமல், உக்ரைன் போருக்கான செலவை அமெரிக்கா எடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்புவதாக Axios ஊடகத்திடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார். |