
கிரிக்கெட் அணியில் இருந்து அவரை தூக்குங்க! மோசமா ஆடுறாரு.... ரசிகர்கள் ஆதங்கம்
தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் தினேஷ் சண்டிமாலை அணியில் ஏன் சேர்க்கிறீர்கள் என ரசிகர்கள் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இலங்கை அணியில் தினேஷ் சண்டிமால் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆனால் ரன்களை குவிக்க தவறி வரும் அவர் சொற்ப ரன்களில் தொடர்ந்து அவுட்டாகி வருகிறார். அதன்படி சண்டிமால் கடந்த 49 இன்னிங்சில் சதம் அடிக்காமல் உள்ளார்.
கடைசியாக கடந்த 2018 ஜூன் மாதம் நடந்த போட்டியில் தான் அவர் சதமடித்தார். அப்போதில் இருந்து அவரது பேட்டிங் சராசரி வெறும் 22.74ஆக உள்ளது.
சண்டிமாலின் பேட்டிங் மற்றும் கீப்பிங் மிகவும் மோசமாக உள்ளது.
ஆனால் தொடர்ந்து அணியில் அவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என கேள்வியெழுப்பும் ரசிகர்கள் அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யலாமே என தெரிவித்துள்ளனர்.