பின்னடைவை சந்திக்கும் பிரதமர் ரிஷி சுனக்!

05.07.2024 08:07:24

பிரித்தானியா நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுகளில் தற்போதைய நிலவரப்படி, பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 2 இடத்திலும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை லிபரல் டெமாக்கிரட்ஸ் கட்சி 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறமையும் குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி சந்திக்கும் என தேர்தலுக்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்புக்களில் குறிப்பிடப்பட்டது.

அதன்படி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என அந்த கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

 

இதேவேளை, தொழிற் கட்சிக்கு 410 ஆசனங்கள் கிடைக்கும் கிடைக்கும் எனவும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் கெய்ர் ஸடர்மெர் என வெளியான கருத்துக் கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டுள்ளது.