அதிகாரிகள் இடமாற்றம் இல்லை.
|
இன்று முதல் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம் கிடையாது. தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் முடியும் வரை அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் இருக்க மத்திய பரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் உள்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், மாநிலம் முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று செயலாளர் தெரிவித்துள்ளார்.
|
|
அந்தக் கடிதத்தின்படி, சுய கணக்கெடுப்பு, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய முதல் கட்டப் பணிகள் ஜூலை 17 அன்று தொடங்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இடமாற்றங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதற்கு முன்னர், முன்மொழியப்பட்ட இடமாற்றங்களை ஆய்வு செய்து முடிக்குமாறு துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணிகளைச் செயல்படுத்தும்போது எவ்வித நிர்வாகச் சிக்கல்களும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசின் உள்துறை செயலாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இடமாற்றம் செய்யப்படாமல் இருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. |