தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கும் சமந்தா

30.04.2024 00:16:15

தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி, முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து, தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யாவை கரம் பிடித்து, நான்கு ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தி, அதன் பிறகு மண முறிவு ஏற்பட்டு, தொடர்ந்து திரையுலகில்  பான் இந்திய நட்சத்திர நடிகையாக தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா.. சிறிய இடைவெளிக்குப் பிறகு அவருடைய பிறந்த நாளில் திரைப்பட தயாரிப்பாளராக அவதாரமெடுத்திருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

சமந்தா முன்னணி நட்சத்திர நடிகையாகவும், திருமணத்திற்குப் பிறகு கதையின் நாயகியாகவும் நடித்து பல வெற்றிகளை குவித்தார்.

இந்தத் தருணத்தில் அவருக்கு உடல் ரீதியாக சுகவீனம் ஏற்பட்டு, அதற்கான சிகிச்சையையும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாத சமந்தா அவருடைய 37வது பிறந்த நாளில் அவர் கதையின் நாயகியாக நடிக்கும் படத்தின் பெயரையும், சொந்தமாக தொடங்கி இருக்கும் பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையும் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் இதற்காக அவர் வெளியிட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் ஆவேசமாக தோன்றுவது இடம் பிடித்திருப்பதால் இந்தத் திரைப்படமும் அவர் கதையின் நாயகியாக நடிக்கக்கூடும் என்பதனை சொல்கிறது.  படத்திற்கு மா இன்ட்டி பங்காராம் ( எங்க குடும்பத்தின் பங்காராம்) என பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிய வருகிறது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ட்ராலாலா மூவி பிக்சர்ஸ் என பெயரிட்டிருக்கிறார். இந்தப் படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு பின் நடிகைகள் தயாரிப்பாளராவது ட்ரெண்ட். லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் தரமான படைப்புகளையும், கொமர்சலான படைப்புகளையும் சமந்தா தயாரிப்பார் என எதிர்பார்க்கலாம்.