சமந்தா நடிக்கும் திரைப்படத்தை இயக்கும் டாப்ஸி !

01.11.2021 13:22:39

 

நடிகை சமந்தா நடிக்கும் புதிய திரைப்படத்தை நடிகை டாப்ஸின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் பெண்ணை மையமாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த திரைப்படம் மூலம் நடிகை சமந்தா பொலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகை டாப்ஸி சில மாதங்களுக்கு முன்பு புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு அவுட்சைடர் பிலிம்ஸ் என பெயர் வைத்துள்ளார்.