
பாலா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
19.10.2021 12:21:07
தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அடுத்து பாலா இயக்கும் படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்திற்காக சென்னையில் போட்டோஷூட் நடத்தி உள்ளனர். படப்பிடிப்பிற்கு முந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு துவக்கத்தில் படப்பிடிப்பை துவங்க எண்ணி உள்ளனர். நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்தில் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அநேகமாக இவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.