லோகேஷ் கனகராஜின் அடுத்த பட நாயகன் விஜய் சேதுபதி

03.09.2021 14:34:27

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை தற்போது கமலின் விக்ரம் படத்திலும் வில்லனாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தைப் போலவே இந்த படத்திலும் வெயிட்டான வில்லனாக நடிக்கிறார் விஜயசேதுபதி.

இந்நிலையில், அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன், வெற்றிமாறன் என 11 இயக்குனர்கள் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத் தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது அப்படத்தின் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தின் ஹிட் சென்டிமென்ட் காரணமாகவே இந்த முடிவினை லோகேஷ் கனகராஜ் எடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.