அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

25.01.2022 12:20:02

பிரபல மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இணையதளத்தில் இந்திய தேசியக்கொடி இடம் பெற்ற டி ஷார்ட்கள், காலணிகள் இடம் பெற்று இருந்தன. மூவர்ணக்கொடியை அவமதிக்கும் வகையில், அமேசான் நிறுவனத்தின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக பலரும் கடுமையான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். 

 

இந்த நிலையில்,  அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபிக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தேசியக்கொடி சட்டத்தை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர்  பதிவிடுமாறு மத்தியபிரதேச அரசின்  உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.