மேற்கு ஆப்பிரிக்கா: வெடி விபத்தில் 63 பேர் பலி

23.02.2022 11:15:46

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாசோவின் பொனி மாகாணத்தைச் சேர்ந்த பொம்ப்லோரா பகுதியில் தங்கம் எடுப்பதற்காக சுரங்கத்தில் வைக்கப்பட்ட வெடி திடீரென வெடித்துச் சிதறியதில் அங்கிருந்த பணியாளர்கள் 63  பேர் உயிரிழந்தனர்.

 

மேலும், 55 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதிகப்படியான வெடிப்பொருளை சுரங்கத்தில் வைத்திருந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.