வண்ணமயமான ஒலிம்பிக் நிறைவு விழா
09.08.2021 08:53:07
கொரோனாவை சமாளித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இதற்காக டோக்கியோ நிர்வாகத்துக்கு உலக விளையாட்டு நட்சத்திரங்கள் 'அரிகாட்டோ'(ஜப்பான் மொழியில் நன்றி) தெரிவித்தனர். அடுத்த ஒலிம்பிக் நடக்க உள்ள பாரிஸ் நகரை வரவேற்றனர். நிறைவு விழா கண்கவர் வாணவேடிக்கையுடன் எளிமையாக நடந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி, கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தாமதத்திற்கு பின், கடந்த ஜூலை 23ல் துவங்கியது. மொத்தம் 18 நாட்கள் நடந்த இப்போட்டியில், அகதிகள் அணி உட்பட 206 நாடுகளை சேர்ந்த 11,090 நட்சத்திரங்கள், 33 போட்டிகளில், 339 பிரிவுகளில் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் முதன்முறையாக அதிகபட்சமாக 124 நட்சத்திரங்கள், 18 வகையான போட்டிகளில் விளையாடினர். இம்முறை 340 தங்கம், 338 வெள்ளி, 402 வெண்கலம் என, மொத்தம் 1080 பதக்கம் வழங்கப்பட்டன.