ஹிஷாலினி மரணம் ; இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று!

31.07.2021 08:43:21

ஹிசாலினியின் சரீரம், மீதான இரண்டாம் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

டயகம மேற்கில் உள்ள மயானத்தில் அவரது சரீரம் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று அவரது சரீரம் தோண்டி எடுக்கப்பட்டது.

ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழுவின் முன்னிலையில் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், இன்றைய தினம் இரண்டாவது பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.