பெப்ரவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.

10.03.2021 09:32:53

ஐசிசி-யின் பெப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சிறப்பாக விளையாடினார்.

பெப்ரவரியில் நடைபெற்ற 3 போட்டியில் 24 விக்கெட் வீழ்த்தியதுடன், 176 ஓட்டங்களையும் அடித்தார். அதில் சென்னையில் விளையாடிய முக்கியமான போட்டியில் சதம் விளாசினார்.

இதன்காரணமாக பெப்ரவரி மாதத்திற்கான ஐசிசி-யின் சிறந்த வீரர் விருதை அஷ்வின் தட்டிச் சென்றுள்ளார்.

ஜனவரி மாதத்திற்கான விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். ஐசிசி அறிமுகப்படுத்திய நிலையில் முதல் இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே விருதுகளை கைப்பற்றியுள்ளனர்.