நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடு

21.12.2022 16:12:18

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி காவல்துறை ஊடகப்பிரிவு விளக்கமளித்துள்ளது.

விசேட பாதுகாப்பு

நத்தார் வழிபாடுகள் நடைபெறும் தேவாலயங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் எந்தவித இடையூறுமின்றி வழிபாடுகளில் கலந்து கொள்ளவும், பண்டிகையினை கொண்டாடவும் இந்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.