உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் .

27.10.2026 08:21:33

கீவ் மீதான ரஷ்யத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட மருத்துவ வசதிகள் சேதமடைந்ததாகவும் மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார் .

 

ஒரு பல்கலைக்கழக வளாகத்தை நேற்றிரவு(26) பாலிஸ்டிக் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், ஏவுகணைகள் மிகவும் நெரிசலான பகுதிகளைத் தாக்கியுள்ளன, மேலும் அருகில் ஒரு இராணுவ வசதி கூட இல்லை. இது நகரத்தின் மீதும், அதன் உள்கட்டமைப்பின் மீதும் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளுக்கு நிலவும் கடுமையான பற்றாக்குறைக்கு மத்தியில், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு வழிவகுக்கும் வகையில், தெற்கு கெர்சன் மாகாணத்தில் உள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு நகரமான ஒலேஷ்கியில் தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு இந்தத் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டது.