தேர்தலுக்கு பிறகு ஈரான் போர் முடிவுக்கு வரும்" .
|
இடைக்கால தேர்தலுக்கு பிறகு ஈரான் உடனான மோதல் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு, ஈரானுடனான மோதல் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன் உச்சத்தை தொட்டு வரும் எரிபொருள் விலையும் பெருமளவு குறையும் என்று டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். |
|
புதன்கிழமை டெக்சாஸ் மாநிலம் டல்லாஸுக்கு(Dallas) புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்போது புவிசார் பதற்றங்களுக்கும், உள்நாட்டு பொருளாதார நிவாரணத்திற்கும் உள்ள தொடர்பினை டிரம்ப் விளக்கினார். மேலும் இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு எண்ணெய் விலைகள்(oil prices) அதள பாதாளத்திற்கு செல்லும் என்றும், எரிவாயுகளின்(gasoline) விலை கலன்(gallon) ஒன்றுக்கு 2 டொலர்கள் வரை குறையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரானுடனான தூதரக உறவுகள் குறித்து பேசிய டிரம்ப், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அணுசக்தி ஒப்பந்தத்தை விட கூடுதலான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அதே சமயம் ஈரானுடன் வழக்கமான ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதை வெளிப்படுத்திய டிரம்ப், எத்தகைய வழிமுறைகளில் போரை முடிவுக்கு கொண்டு வரப் போகிறோம் என்பது குறித்து கூடுதல் தகவலை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. |