தலைகீழாக படுத்திருந்தாலும் செம கிளாமர் தான்

28.10.2022 19:22:00

தமிழ் மலையாள திரையுலகில் நடிகைகளில் ஒருவரான பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக படுத்து இருக்கும் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

பல மலையாள திரைப்படங்களில் நடித்த நடிகை பார்வதி நாயர் தமிழில் அஜீத் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் கமல்ஹாசனின் ’உத்தமவில்லன்’, கீதாஞ்சலி செல்வராகவனின் ’மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தார். தற்போது அவர் ஒரு தமிழ் படம் உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பார்வதி நாயரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

 

இந்த நிலையில் சற்று முன்னர்தான் சோபாவில் தலைகீழாக படுத்து இருக்கும் வீடியோவை பார்வதி நாயர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.,