10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வத்திகான் திரும்பினார்!
15.07.2021 10:36:10
குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த 84வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், கடந்த 4ஆம் திகதி இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மூன்று மணித்தியாலங்கள் நடந்த அறுவை சிகிச்சையில், அவரது பெருங்குடலின் இடதுபாகம் அகற்றப்பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
அத்துடன் அவர் மருத்துவமனையில் இருந்தவாறே தினசரி பிரார்த்தனை மற்றும் ஞாயிறு வழிபாட்டை நடத்தினார். இந்த நிலையில் அவர் நேற்று (புதன்கிழமை) வத்திகான் திரும்பினார்.