லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகை
15.12.2021 12:22:54
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனைக்கு பிறகு ஆவணங்களை எடுத்துச் சென்ற போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகனத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் கைப்பற்றின. முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்ட பொருட்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைபற்றினர்.